பிளிப்கார்ட்டின் Big Billion Days Sale தொடங்கும் தேதி தெரியுமா?

இந்த ஆண்டுக்கான பிக் பில்லியன் டேஸ் விற்பனை செப்டம்பர் 29ஆம் தேதி தொடங்கும் எனத் தெரிகிறது. ஆனால் பிளிப்கார்ட் பிளஸ் உறுப்பினர்களுக்கு மட்டுமே இந்த சேவை அன்றே கிடைக்கும். மற்ற வாடிக்கையாளர்கள் செப்டம்பர் 30ம் தேதி முதல் பொருட்களை வாங்கலாம். இந்த Big Billion Days விற்பனை ஒரு வாரம் நடைபெறும் என கூறப்படுகிறது. இந்த ஆண்டுக்கான பிக் பில்லியன் டேஸ் விற்பனை தொடங்கும் தேதி முதலில் கூகுள் தேடல் பட்டியல் (Google search listing) மூலம் கசிந்தது. பிரபல டிப்ஸ்டர் முகுல் ஷர்மா தனது X வலைதள பக்கத்தில் விற்பனை தொடங்கும் விவரங்களைப் பகிர்ந்துள்ளார். ஆனால் அது குறித்து பிளிப்கார்ட் இதுவரை எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை.

- Advertisement -

Comments are closed.