விமானத்தில் பாஸ்போர்ட், விசா இல்லாமல் பயணிக்க உதவும் ஆவணம்…!எதுவென தெரியுமா?

பாஸ்போர்ட், விசா ஆகியவை இல்லாமல் பயணிக்கும் வகையில் ஒரு ஆவணம் உள்ளது. அதனை பயன்படுத்தி சர்வதேச நாடுகளுக்கு பயணிக்க முடியும். அந்த ஆவணம் என்ன, அதனை யாரெல்லாம் பயன்படுத்தலாம் என்பது குறித்து பார்க்கலாம்.அதற்கு பெயர் சீமேன் புக் (Seaman Book). விமான நிலையங்கள் மற்றும் துறைமுகங்கள் வழியாக சர்வதேச அளவில் பயணிக்க உதவும் ஆவணமே இந்த சீமேன் புக்.பாஸ்போர்ட்டைப் போலவே சீமேன் புக்கிலும் பணியாளரின் பெயர், பிறந்த தேதி, தேசியம் போன்ற அனைத்து அடிப்படை விவரங்களும் இடம்பெறும். இதுதவிர அவர்கள் பணிபுரியும் கப்பலின் பெயரும் இடம்பெற்றிருக்கும்.சர்வதேச கடற்பகுதியில் இயங்கும் கப்பல்களில் பணிபுரியும் தொழிலாளர்களை அடையாளம் காண்பதற்கு இந்த ஆவணம் முக்கியமாக பயன்படுகிறது. விமான நிலையங்களில் சீமேன் பயன்படுமா?: மூத்த விமான நிலைய அதிகாரி தெரிவித்துள்ள தகவலின்படி, சர்வதேச கப்பல்களில் பணிபுரியும் ஊழியர்கள், தங்கள் பணியில் இணைய பயணம் செய்யும்போது சீமேன் புக், பாஸ்போர்ட் போன்ற ஆவணமாக ஏற்றுக்கொள்ளப்படுகிறது. எனினும், இமிகிரேசன் சோதனையின் இந்த ஆவணத்துடன் கடல்வழி அடையாள ஆவணம் எனப்படும் சிடிசி சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும்.சிடிசி சான்றிதழை விசாவாக பயன்படுத்த முடியும். கப்பலில் பணிபுரியும் ஊழியர்கள் இந்த சிடிசி சான்றிதழை தங்களுக்கான போக்குவரத்து விசாவாக பயன்படுத்த முடியும். எனினும், கப்பல் பணிக்கு செல்லும்போது மட்டுமே இந்த ஆவணங்கள் ஏற்றுக்கொள்ளப்படும். ஆனால் அதுவே தனிப்பட்ட பயணம் என்றால், சாதாரண பயணிகள் போல் பாஸ்போர்ட் மற்றும் விசாவை வழங்க வேண்டும்.

- Advertisement -

Comments are closed.