இந்த தவறுகளை செஞ்சுடாதீங்க..? UPI பேமெண்ட் செய்யும்போது வருத்தப்படுவீங்க..!

யுபிஐ பேமென்ட் முறையில், நொடிப் பொழுதில் பணத்தை செலுத்துவதும் பெறுவதும் எளிதாகியுள்ளதால், சாமானியர்கள் முதல் வணிகர்கள் வரை அனைத்து தரப்பினரும் ஆன்லைன் பணபரிவர்த்தனைகளை மேற்கொண்டு வருகின்றனர். UPI பரிவர்த்தனைகள் கடந்த மூன்று மாதங்களில் மட்டும் 37% அதிகரித்துள்ளதாக தகவல்.ரொக்க பண பரிவர்த்தனைகள் மேற்கொள்வது பெருமளவில் குறைந்து விட்டது.UPI முறையில் கட்டணம் செலுத்தும் போது சில விஷயங்களில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டியது அவசியம்.இன்றைய காலகட்டத்தில் அனைத்துமே டிஜிட்டல் மயமாகி விட்ட நிலையில், இணையவழி பண பரிவர்த்தனை என்பது. கூகுள் பே, போன் பே போன்ற டிஜிட்டல் தளங்கள் நிதி பரிவர்த்தனைகளில் அதிக அளவில் பயன்படுத்தப்படும் நிலையில், ரொக்க பண பரிவர்த்தனைகள் மேற்கொள்வது பெருமளவில் குறைந்து விட்டது., இதனால் மோசடிகளில் சிக்கி பணம் இழக்கும் அபாயமும் உண்டு என்பதை மறுக்க இயலாது. எனவே, UPI முறையில் கட்டணம் செலுத்தும் போது சில விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். இல்லையெனில் பெரும் இழப்பு ஏற்படலாம்.UPI பின் எண்ணை யாருடனும் பகிரக் கூடாது.யுபிஐ செயலியை புதுப்பிக்கவும்.நம்மில் பலருக்கும் நாம் பயன்படுத்தும் UPI செயலியை அப்டேட் செய்யும் பழக்கம் இருப்பதில்லை. புதுப்பிப்புகளில் பாதுகாப்பு மேம்பாடுகள் மற்றும் புதிய அம்சங்கள் அடங்கும் என்பதால், UPI செயலியை எப்போதும் சமீபத்திய பதிப்பிற்குப் புதுப்பித்துக்கொள்ளவும். இது பாதுகாப்பு அம்சங்களைவலுப்படுத்தும்.பரிவர்த்தனை விவரங்களை கவனமாகப் படிக்க வேண்டும்.பணம் செலுத்துவதற்கு முன், யுபிஐ கணக்கு விபரம், அனுப்பப்படும் தொகை போன்ற பரிவர்த்தனை விவரங்களைக் கவனமாகப் படித்து, சரியான தொகையை சரியான நபருக்குச் செலுத்துகிறீர்கள் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளவும். தவறான நபருக்கு பணம் செலுத்தினால், பணத்தை திரும்பப் பெறுவது கடினம்.

- Advertisement -

Comments are closed.