நாளை சென்னையில் மின்சார ரெயில் சேவை ரத்து…!
பராமரிப்பு பணிகள் காரணமாக சென்னை கடற்கரை – தாம்பரம் இடையிலான மின்சார ரெயில் சேவை நாளை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி நாளை காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சார ரெயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ள நேரத்தில் பயணிகளின் வசதிக்காக சென்னை கடற்கரை – பல்லாவரம் இடையே இருமார்க்கத்திலும் சிறப்பு ரெயில்கள் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளை காலை 6.15 மணி முதல் மாலை 5.05 மணி வரை 20 முதல் 30 நிமிட இடைவெளியில் சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகின்றன. நாளை மாலை 5 மணிக்குப் பிறகு மின்சார ரெயில்கள் வழக்கம்போல் இயங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments are closed.