‘எம்மி விருதுகள்’ 2024 – ஜெரிமி ஆலன் ஒயிட் சிறந்த நடிகருக்கான விருதை வென்றார்…!
சிறந்த திரைப்படங்களுக்கு, உயரிய விருதான ஆஸ்கர் வழங்கப்படுவது போல தொலைக்காட்சி மற்றும் ஓ.டி.டி தளங்களில் வெளியாகும் படங்கள் மற்றும் வெப் தொடர்களுக்கு மிக உயரிய விருதான `எம்மி விருதுகள்’ வழங்கப்பட்டு வருகின்றன. அந்த வகயில், இந்த ஆண்டுக்கான எம்மி விருது வழங்கும் விழா லாஸ் ஏஞ்சல்சில் பிரமாண்டமாக நடைபெற்றது. இந்த விழாவில் ஏராளமான சின்னத்திரை நட்சத்திரங்கள் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த நட்சத்திரங்களுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. இதில், ‘தி பியர்’ என்ற நகைச்சுவை தொடரில் நடித்ததற்காக ஜெரிமி ஆலன் ஒயிட்டிற்கு சிறந்த நடிகருக்கான விருது வழங்கப்பட்டது.
Comments are closed.