முதல் மின்சார பைக்: ராயல் என்பீல்டு புதிய வரவு!”
ராயல் என்பீல்டு தனது முதல் மின்சார பைக் நவம்பர் 4, 2024 அன்று அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்த உள்ளது இதற்காக டீசர் வீடியோவையும் சமூக ஊடகங்களில் வெளியிட்டுள்ளது. இது பாரம்பரிய தோற்றத்துடன், வட்ட வடிவ ஹெட்லைட் மற்றும் சிங்கிள் சீட்டர் அமைப்புடன் வருகிறது. பைக்கின் சார்ஜிங் போர்ட் பெட்ரோல் டேங்கின் வடிவில் இருப்பதுடன், விலை ரூ. 5 லட்சத்திற்குள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சமூக ஊடகங்களில் ராயல் என்பீல்டு, “Royal Enfield EV” என்ற கணக்கில் பைக்கின் விளம்பரத்தைத் தொடங்கியுள்ளது. மின்சார வாகன சந்தையில் போட்டியாக, இந்த இ-பைக் அமைக்கப்போகிறது.
Comments are closed.