நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி… சர்பராஸ் கான் அபார சதம்..
இந்தியா வந்துள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இந்நிலையில் ,3ம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்தியா தனது 2-வது இன்னிங்சில் 49 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 231 ரன்கள் எடுத்துள்ளது. இதனை தொடர்ந்து, இன்று (19/10/2024) 4-ம் நாள் ஆட்டம் தொடங்கியது. சர்பராஸ் கான் மற்றும் ரிஷப் பண்ட் ஆகியோர் விளையாடி வருகின்றனர். இதில் சர்பராஸ் கான் சதம் விளாசினார். காலை 10 மணி நிலவரப்படி சர்பரஸ் கான் 117 பந்துகளில் 106 ரன்களுடன் விளையாடி வருகிறார். இந்தியா 60 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 281 ரன்கள் எடுத்துள்ளது. தொடர்ந்து விளையாடி வருகிறது.
Comments are closed.