சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வெள்ளப்பெருக்கு – போக்குவரத்து துண்டிப்பு..!!
ஃபெஞ்சல் புயல் காரணமாக பெய்த கனமழையால் விழுப்புரம் மாவட்டம் அரசூர் பேருந்து நிறுத்தம் அருகே மலட்டாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையை 2 அடிக்கு மேல் மூழ்கடித்தபடி வெள்ளம் செல்வதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. விக்கிரவாண்டி அருகே மழைநீர் தேங்கியுள்ளதால் சித்தனியல் இருந்து போக்குவரத்து ஒரு வழிப்பாதையாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தேசிய நெடுஞ்சாலை துண்டிக்கப்பட்டதால் திருச்சி நோக்கி சென்ற வாகனங்கள் முன்னேற முடியாமல் சாலையிலேயே நீண்ட தூரத்திற்கு நிறுத்தப்பட்டுள்ளன இதனால் அவ்வழியாக செல்லும் பயணிகள் பெரிதும் அவதிக்குள்ளாகி உள்ளனர்.
Comments are closed.