சென்னை மெரீனாவில் உணவு திருவிழா

தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் மகளிர் சுயஉதவிக் குழுக்கள் தயாரிக்கும் உணவுப் பொருட்களின் உணவு திருவிழா, நாளை டிசம்பர் 20 2024 சென்னையில் தொடங்குகிறது. இதுகுறித்து, தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் முக்கிய அறிவிப்பு ஒன்றையும் வெளியிட்டிருக்கிறது.

ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொரு உணவுகள் பிரசித்திபெற்றவை. ஒவ்வொரு ஊருக்கும் உணவின் சுவையும் மாறுபடும். ஆனால் எல்லா ஊர்களின் சுவையும் ஒரே ஊரில் கிடைத்தால்? சென்னைவாசிகளுக்கு மகிழ்ச்சி தான்.

நாளை 20 டிசம்பர் தொடங்கி வரும் செவ்வாய்க்கிழமை 24telete டிசம்பர் வரை நடக்கின்றது. தமிழ்நாட்டின் ஒவ்வொரு மாவட்டங்களிலும் சிறப்பு வாய்ந்த சுவையும், தரமும் நிறைந்த கோவை கொங்கு மட்டன் பிரியாணி, கிருஷ்ணகிரி நோ ஆயில் நோ பாயில், கரூர் தோல் ரொட்டி – மட்டன் கிரேவி, நாமக்கல் பள்ளிப்பாளையம் சிக்கன், ராணிப்பேட்டை ஆற்காடு பிரியாணி, வேலூர் ராகி கொழுக்கட்டை, மதுரை கறி தோசை,  திருச்சி நவதானிய புட்டு உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட உணவு வகைகளை, 65 சுயஉதவிக் குழுக்களைச் சேர்ந்த 150-க்கும் மேற்பட்ட பெண்கள் உடனடியாக சமைத்து, பரிமாறும் வகையில் 35 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.

மேலும் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த சுயஉதவிக் குழுக்கள் உற்பத்தி செய்த கைவினைப் பொருட்கள் உள்ளிட்ட 45 வகையான பொருட்கள் 3 அரங்குகளில் விற்பனை செய்யப்பட உள்ளன. நாளை (வியாழக்கிழமை) மட்டும் மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரை நடைபெறும் உணவு திருவிழா, 21-ந் தேதி முதல் 24-ந் தேதி வரை மதியம் 12.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை நடைபெறும்.

பொதுமக்கள் லேடி வெலிங்டன் கல்லூரி, சென்னை பல்கலைக்கழகம் மற்றும் ராணி மேரி கல்லூரி ஆகிய கல்லூரிகளின் வளாகங்களில் இலவசமாக வாகனங்களை நிறுத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

- Advertisement -

Comments are closed.