சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் பூண்டு விலை கிடுகிடு வென உயர்ந்து மொத்த விற்பனை கடையில் ஒரு கிலோ பூண்டு ரூ.340க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் சில்லறை விற்பனை கடைகளிலும் விலை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. கடந்த மாதம் ஒரு கிலோ ரூ.280க்கு விற்கப்பட்ட பூண்டு நேற்று ரூ.320க்கு விற்பனை செய்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், ஒரே நாளில் ரூ.20 அதிகரித்து இருப்பதால் சில்லறை விற்பனை கடைகளில் மேலும் விலை உயரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதேபோல வெங்காயம் நேற்றை விட ரூ.5 அதிகரித்து ஒரு கிலோ ரூ.60க்கும், கேரட் ரூ.10 உயர்ந்து ரூ.90க்கும் விற்பனையாகிறது.

Comments are closed.