விருதுநகர் விஜயகரிசல்குள அகழாய்வில் தங்க நாணயம் கண்டெடுப்பு…
விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அருகே உள்ள விஜயகரிசல்குளத்தில் 3-ம் கட்ட அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகின்றன. அகழாய்வில் தற்போது வரை 11 குழிகள் தோண்டப்பட்டுள்ளன. அதில் ஏராளமான மண்பாண்ட ஓடுகள், ஆட்ட காய்கள், சுடுமண் முத்திரைகள், ஆபரணங்கள், செப்புக்காசுகள், சூது பவளம், செவ்வந்திக்கல் உள்பட 1,800-க்கும் மேற்பட்ட பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் புதிதாக தோண்டப்பட்ட அகழாய்வு குழியில் 17-ம் நூற்றாண்டைச் சேர்ந்த ஏற்றுமதி வணிகத்திற்கு பயன்படுத்திய தென்னிந்திய பணம் என்று சொல்லப்படும் தங்க நாணயம் சேதமடையாமல் முழுமையாக கிடைத்துள்ளது.
Comments are closed.