தங்கம் விலை குறைவு;இன்றைய நிலவரம் என்ன..?

சென்னையில் தங்கத்தின் விலை கடந்த சில வாரங்களில் அதிரடியாக குறைத்தது  . கடந்த ஜூலை மாதம், இந்திய அரசு தங்கத்தின் இறக்குமதி வரியை குறைத்ததன் காரணமாக, விலை சவரனுக்கு ரூ.2,200 வரை குறைந்து, ரூ.51,000-க்கு கீழே வந்தது. ஆனால், கடந்த மாதம் இறுதியில் இருந்து மீண்டும் விலை உயர ஆரம்பித்தது, ஆகஸ்ட் 4-ந்தேதி புதிய உச்சத்தை தொட்டு, ரூ.56,960-க்கு விற்பனை ஆனது. தற்போது, 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.560 குறைந்து, ரூ.56,240-க்கு விற்பனை செய்யப்படுகிறது, இதனால் நகை வாங்க விரும்பும் மக்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பு உருவாகியுள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.2 குறைந்து ஒரு கிராம் ரூ.100-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

 

- Advertisement -

Comments are closed.