தங்கம் விலை வரலாற்றில் புதிய உச்சம்: இன்றைய நிலவரம்…
கடந்த ஜூலை மாதம் தங்கம் விலை இறக்குமதி வரி குறைவினால் சவரனுக்கு ரூ.51 ஆயிரத்திற்கு கீழே இறங்கினது. ஆனால், இந்நிலையில், கடந்த மாத இறுதியில் தங்கம் விலை மீண்டும் உயர ஆரம்பித்து, தற்போது , சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.640 உயர்ந்து ரூ.57,920-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.7,240-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.2 உயர்ந்து ரூ.105-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 3 நாட்களில் மட்டும் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,160 உயர்ந்துள்ளது. இதனால் நகை பிரியர்கள் மீண்டும் கவலையில் உள்ளனர்.
Comments are closed.