முதல்முறையாக ரூ.59 ஆயிரத்தை தொட்ட தங்கம் விலை- இன்றைய நிலவரம்!..
தங்கம் விலை கடந்த சில நாட்களாகவே ஒருநாள் உயர்வதும், மறுநாள் குறைவதுமாக ஒரு நிலையற்ற தன்மையிலேயே பயணித்து கொண்டிருக்கிறது. சென்னையில் நேற்று முன்தினம் கிராம் ரூ.7,360-க்கும், ஒரு பவுன் ரூ.58,880-க்கும் விற்பனை ஆனது. தங்கம் விலை நேற்று குறைந்தது. தங்கம் விலை சவரனுக்கு ரூ.360 குறைந்து ரூ.58 ஆயிரத்து 520-க்கு விற்பனை செய்யப்பட்டது. கிராமுக்கு ரூ.45 குறைந்து ரூ.7,315-க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.480 உயர்ந்து ரூ.59 ஆயிரத்தை தொட்டது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.60 உயர்ந்து ரூ.7,375-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை இன்று உயர்ந்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 உயர்ந்து ரூ.108-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
Comments are closed.