திருப்பதி கோவிலில் தங்கக்கொடி மரம் சேதம்…!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவம் இன்று மாலை தொடங்க இருக்கிறது. பிரம்மோற்சவ விழா இன்று தொடங்கி 12-ந்தேதி வரை 9 நாட்கள் கோலாகலமாக நடக்கிறது. அதையொட்டி பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்நிலையில் திருப்பதி கோவிலில் தங்கக்கொடி மரம் சேதம் அடைந்துள்ளது. தங்கக்கொடி மரத்தில் இருந்த வளையம் கழன்று விழுந்த நிலையில் அதனை சீரமைக்கும் பணியில் ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இன்று மாலை கொடியேற்றத்துடன் பிரமோற்சவம் தொடங்க உள்ள நிலையில் தங்கக்கொடி மரம் சேதம் அடைந்துள்ளதால் பக்தர்கள் கவலை அடைந்துள்ளனர்.

- Advertisement -

Comments are closed.