அரசு பொதுத்துறை நிறுவனங்களுக்கு நாளை விடுமுறை…

வடகிழக்குப் பருவமழை தொடங்கியுள்ளதை அடுத்து சென்னைக்கு இன்றும் நாளையும் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று முதல் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் பல இடங்களில் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடி வருகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல இந்த 4 மாவட்டங்களிலும் உள்ள அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களுக்கும் நாளை (அக்.16) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

Comments are closed.