“பச்சை நிற பாலை (கிரின் மேஜிக்) நிறுத்தவில்லை” – ஆவின் நிறுவனம் விளக்கம்.
ஆவின் நிறுவனம் புதிதாக அறிமுகம் செய்துள்ள ஆவின் க்ரீன் மேஜிக் பால் பாக்கெட்டில், அளவை குறைத்து விலையை அதிகரித்து 900மி.லி பாக்கெட் ரூ.50 என்ற விலையில் விற்பதாக, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றம் சாட்டி கண்டனம் தெரிவித்திருந்தார். இந்நிலையில், பச்சை நிற பால் விற்பனை குறைப்பு மற்றும் உற்பத்தி நிறுத்தம் குறித்து எந்த முடிவும் ஆவின் நிர்வாகம் எடுக்கவில்லை எனவும்,வைட்டமின் A மற்றும் D செறிவூட்டப்பட்ட புதுவகை பாலை அறிமுகப்படுத்த ஆய்வு மேற்கொள்ளப்படுவதாகவும், இதுதொடர்பாக பொதுமக்களிடம் கருத்து கேட்கப்பட்டுள்ளவதாகவும், மேலும், விற்பனையை இன்னும் தொடங்கவில்லை எனவும் ஆவின் நிறுவனம் விளக்கமளித்துள்ளது.
Comments are closed.