நேபாளத்தில் கடும் நிலச்சரிவு : பலி எண்ணிக்கை 170-ஐ தாண்டியது..!
நேபாளத்தில் கடந்த 4 நாட்களாக பெய்து வரும் கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 170-ஐ தாண்டி உள்ளது. கனமழையால் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், காணாமல் போன 42 பேரை தேடும் பணியில் மீட்புக்குழுவினர் ஈடுபட்டு வருவதாகவும் அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. மேலும் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் அங்குள்ள பல ஆறுகளில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. நிலச்சரிவு காரணமாக நேபாளம் முழுவதும் 44 நெடுஞ்சாலைகள் மூடப்பட்டு இருக்கின்றன. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு மக்களின் இயல்பு வாழ்க்கையும் முடங்கி இருக்கிறது. உள்நாட்டு விமான சேவையும் பாதிக்கப்பட்டுள்ளது. மக்கள் யாரும் அவசியம் இன்றி பயணிக்க வேண்டாம் என்றும் இரவு நேரங்களில் மக்கள் அனைவரும் பயணம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது என்று நேபாள அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments are closed.