ஐபோன் 15 முதல் ஐபோன் 12-க்கு ஆப்பிள் நிறுவனம் எவ்வளவு தரும்?
ஆப்பிள் நிறுவனம் சமீபத்தில் அதன் புதிய ஐபோன் 16 தொடரை உலகளவில் அறிமுகப்படுத்தியது. புதிய ஐபோன் 16 விலையில் ஏறக்குறைய பாதிக்கு பாதி குறைக்க ஆப்பிள் தற்போது வாய்பளித்துள்ளது. இது முழுக்க முழுக்க ஆப்பிள் ஐபோன் பயனர்களுக்கு மட்டுமானது. காரணம், உங்களிடம் பழைய ஐபோன் இருந்தால், அதிக எக்ஸ்சேஞ் செய்து, புதிய ஐபோன் 16 வரிசைக்கு அப்கிரேட் செய்துகொள்ள, ஆப்பிள் இப்போது அனுமதிக்கிறது. உங்களிடம் ஐபோன் 15, ஐபோன் 14, ஐபோன் 13 அல்லது ஐபோன் 12 சாதனங்களின் வரிசையில் ஏதேனும் ஒரு மாடல் இருந்தால் அதை இப்போது எக்ஸ்சேஞ் செய்துகொள்ளலாம். அதற்கு ஆப்பிள் நிறுவனம் இப்போது ரூ. 37,900 வரை எக்ஸ்சேஞ் சலுகை கட்டணமாக பெற முடியும். இப்படி எந்த ஐபோன் மாடலுக்கு என்ன விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது என்ற தகவலை தெரிந்துகொள்ளலாம்.
Comments are closed.