ஸ்மார்ட் டிவியை சுத்தம் செய்யும் முறை

இன்று எல்லா வீடுகளிலும் ஸ்மார்ட் டிவியை காணலாம். ஸ்மார்ட் டிவிகள் சாதாரண டிவிகளை விட மெல்லியதாக இருக்கும். ஆனால், தரத்தில் சாதாரண டிவியை விட சிறந்தது. ஸ்மார்ட் டிவியை சுத்தம் செய்வது எளிய வேலை தான். ஆனால் சரியாக செய்யாவிட்டால் டிவி பழுதடைய வாய்ப்பு அதிகம் உள்ளது.

ஸ்மார்ட் டிவியை சுத்தம் செய்யும் போது செய்யக் கூடாத சில தவறுகள்

  • இரசாயனங்கள் பயன்படுத்த வேண்டாம்
  • கடினமான பிரெஷ்களை பயன்படுத்த வேண்டாம்
  • சுத்தம் செய்ய தண்ணீரை தெளிக்க கூடாது
  • கடினமான துணிகளை பயன்படுத்தக் கூடாது

ஸ்மார்ட் டிவியை சுத்தம் செய்யும் போது கவனத்தில் கொள்ள வேண்டியவை

  • டிவியின் மின்சார இணைப்பை துண்டிக்கவும்
  • மைக்ரோஃபைபர் துணியைப் பயன்படுத்தவும்
  • தூசியை அகற்ற ஏர் ப்ளோயரரைப் பயன்படுத்தவும்
  • ஸ்கிரீன் கிளீனரை பயன்படுத்தவும்.

டிவியின் திரையில் உள்ள கரைகள் அதை அகற்ற நீங்கள் சானிடைசர் பயன்படுத்தலாம். உங்கள் வீட்டில் ஸ்கிரீன் கிளீனர் இருந்தால் கூட பயன்படுத்தலாம். டிவி திரையில் எந்த வகையான கடினமான இரசாயனத்தையும் பயன்படுத்த வேண்டாம். இது திரையை சேதப்படுத்தலாம்.

- Advertisement -

Comments are closed.