மகளிர் டி20 உலகக்கோப்பை பரிசுத் தொகையை அதிகரித்த ஐசிசி.
ஐசிசி மகளிர் டி20 கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் 3 ஆம் தேதி முதல் 20 ஆம் தேதி வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவிருக்கிறது. இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, இலங்கை உள்ளிட்ட 10 அணிகள் இதில் கலந்து கொள்ளும் நிலையில் ரூ. 66 கோடியே 64 லட்சம் பரிசுத் தொகை வழங்கப்படும் என ஐசிசி அறிவித்துள்ளது. முதலிடம் பிடிக்கும் அணிக்கு ரூ. 19 கோடியே 59 லட்சமும், 2 ஆம் இடம் பிடிக்கும் அணிக்கு ரூ. 9 கோடியே 79 லட்சமும் பரிசாக வழங்கப்படுகிறது. ஐந்தாவது முதல் எட்டாவது வரை இடம்பெறும் அணிகளுக்கு தலா 2 கோடியே 26 லட்ச ரூபாயும், ஒன்பதாவது, பத்தாவது இடங்களைப் பிடிக்கும் அணிகளுக்கு தலா 1 கோடியே 13 லட்ச ரூபாயும் பரிசு வழங்கப்படும் என ஐசிசி தெரிவித்துள்ளது.
Comments are closed.