பூர்விகா மொபைல் உரிமையாளர் யுவராஜ் வீட்டில் 2வது நாளாக வருமான வரித்துறை சோதனை..!!

தமிழகம் மட்டுமின்றி தென்னிந்தியா முழுவதும் 400க்கும் மேற்பட்ட கிளைகளுடன் பூர்விகா நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனத்தின் உரிமையாளர் யுவராஜ் நடராஜன்.இந்நிறுவனத்தின் வரி ஏய்ப்பு புகாரின் அடிப்படையில் நடத்தப்பட்ட இந்த சோதனை இரண்டாவது நாளாக இன்றும் (18/10/2024) தொடர்கிறது. நேற்று (17/10/2024) பூர்விகா உரிமையாளரின் வீடு, சென்னை பள்ளிக்கரணையில் இந்த நிறுவனம் தொடர்புடைய மற்றொரு இடம் என 3 இடங்களில் சோதனை நடைபெற்றது. தீவிர சோதனை முடிவடைந்த பின்னே ஆவணங்கள் எதுவும் சிக்கியதா என்பது குறித்த தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

Comments are closed.