விடுதலைப் போராட்ட வீரர்களுக்கான ஓய்வூதியம் உயர்வு -தமிழக அரசு
தமிழக அரசு, விடுதலைப் போராட்ட வீரர்களுக்கான தற்போதைய மாதாந்திர ஓய்வூதியத்தை உயர்த்துவதற்கான புதியஅரசாணையை வெளியிட்டுள்ளது.முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சுதந்திர தினத்தன்று வெளியிட்ட அறிவிப்பின்படி,
விடுதலைப் போராட்ட வீரர்களின் மாதாந்திர ஓய்வூதியத்தை ரூ.20,000-ல் இருந்து ரூ.21,000-க்கு உயர்த்தப்பட்டுள்ளது.அதேவேளை, விடுதலைப் போராட்ட தியாகிகளின் குடும்பங்களுக்கு வழங்கப்படும் மாதாந்திர ஓய்வூதியம் ரூ.11,000-ல் இருந்து ரூ.11,500-க்கு உயர்த்தப்பட்டுள்ளது. கட்டபொம்மன், வ.உ.சிதம்பரனார் உள்ளிட்டோரின் வழித்தோன்றல்கள் பெறும் மாதாந்திர சிறப்பு ஓய்வூதியம் ரூ.10,500 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

Comments are closed.