பாரா ஒலிம்பிக் போட்டியில் மொத்தம் 24 பதக்கம் வென்ற இந்தியா
பாரா ஒலிம்பிக்ஸ் பிரான்ஸ் தலைநகர் பாரீஸ் நகரில் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற போட்டிகளில் இந்திய வீரர்கள் பங்கேற்றுள்ளனர். மாற்றுத்திறனாளிகளுக்கான 17-வது பாராஒலிம்பிக் தொடரில் ஆண்கள் கிளப் எறிதல் எப். 51 இறுதிப்போட்டி நேற்று நடைபெற்றது. இறுதிப்போட்டியில் சிறப்பாக செயல்பட்ட இந்திய வீரர்கள் தங்கம் , வெள்ளி என 2 பதக்கங்களை வென்றுள்ளனர். இந்திய வீரர் தரம்பிர் 34.92 மீட்டர் தூரம் வீசி முதலிடம் பிடித்து தங்கப் பதக்கத்தை வென்றார். மற்றொரு இந்திய வீரர் பிரணவ் சூர்மா 34.59 மீட்டர் தூரம் வீசி 2வது இடம் பிடித்து வெள்ளிப் பதக்கம் வென்றார். தங்கம், வெள்ளி வென்ற தரம்பிர், பிரணவ் சூர்மா ஆகியோருக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். பாரா ஒலிம்பிக்கில் இந்தியா இதுவரை 5 தங்கம், 9 வெள்ளி, 10 வெண்கலம் என மொத்தம் 24 பதக்கங்களை வென்றுள்ளது.
Comments are closed.