சபரிமலை செல்லும் பக்தர்கள் பூஜை நேரம், போக்குவரத்து வசதிகளை தெரிந்துகொள்ள ‘செயலி’ அறிமுகம்..!!

சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு வரும் பக்தா்களுக்கு கேரள அரசு அனுமதியை கட்டுப்படுத்தியுள்ளது. இந்த ஆண்டு மண்டல பூஜை மற்றும் மகரவிளக்கு யாத்திரைக்கு, 80,000 பக்தா்கள் இணையத்தில் பதிவு செய்தபின் அனுமதிக்கப்படுவார்கள், மேலும் 10,000 பக்தா்களுக்கு நேரடியாக அனுமதி அளிக்கப்படும்.பக்தா்களுக்கு தகவல் வழங்க உதவ கேரள அரசு, முத்தூட் குழுமத்துடன் சேர்ந்து “சுவாமி ஏஐ சாட் பாட்டை” என்ற செயலியை உருவாக்கியுள்ளது. இந்த செயலி, பூஜை நேரங்கள், ரெயில், விமான நிலைய தகவல்கள் உள்ளிட்ட பல்வேறு தகவல்களை தமிழில், மலையாளத்தில், ஆங்கிலம், இந்தி, தெலுங்கு, கன்னடம் போன்ற மொழிகளில் வழங்கும்.இதன் மூலம், பக்தா்களுக்கு தகவல்கள் எளிதாக கிடைக்கப்பெறும் என்று முதல்வர் பினராயி விஜயன் கூறியுள்ளார்.

- Advertisement -

Comments are closed.