ஆட்குறைப்பு செய்யும் விப்ரோ, TCS, இன்ஃபோசிஸ் நிறுவனங்கள்.. காரணம் இதுதானா?
இந்த ட்ரெண்ட் ஆனது 2026 வரைக்கும் தொடரும் என தகவல்கள் வெளிவந்துள்ளதால் பணியாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
மென்பொருள் தொழில்நுட்பத்தில் உலகின் முன்னணி நிறுவனங்களாக செயல்பட்டு வரும் டிசிஎஸ், விப்ரோ, இன்ஃபோசிஸ், HCL, ஏசென்டர் உள்ளிட்ட நிறுவனங்கள் பணியாளர்களை ஆட்குறைப்பு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த 18 மாதங்களில் மட்டும் கணிசமான அளவு பணியாளர்கள் இந்த நிறுவனங்களில் இருந்து நீக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. முன்னணி நிறுவனங்கள் தங்களுக்கு தேவையான பணியாளர்களை ஆண்டுதோறும் வேலைக்கு அமர்த்துவதை வழக்கமாக கொண்டுள்ளன. அதேநேரம் தேவைக்கு அதிகமாக இருப்போர் பணி நீக்கம் செய்யப்பட்டும் வருகிறார்கள். பெரிய நிறுவனங்களில் இந்த ஆட்கள் சேர்ப்பு, ஆட்கள் குறைப்பு என்பது வழக்கமான ஒன்றாக இருந்து வருகிறது.
இந்நிலையில் மென்பொருள் துறையில் முன்னணி நிறுவனங்களாக இருக்கும் விப்ரோ, இன்ஃபோசிஸ், எச்.சி.எல்., டாடா கன்சல்டன்சி சர்வீஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் தங்களது பெஞ்ச் சைஸ் பணியாளர்களை குறைத்துள்ளது. பெஞ்ச் சைஸ் என்பது முழு நேர பணியாளர்களை குறிக்கும். இவர்கள் ஆக்டிவ்வாக எந்த ஒரு திட்டத்திலும், அல்லது ப்ராஜெக்ட்டிலும் ஈடுபடமாட்டார்கள். இந்த பெஞ்ச் சைஸ் பணியாளர்கள் ரிசர்வ் பணியாளர்களாக இருப்பார்கள்.
தேவை அதிகமாக ஏற்படும்போது இவர்கள் பணிக்கு அமர்த்தப்படுவார்கள். பெரிய நிறுவனங்கள் இந்த மாதிரியான பெஞ்ச் சைஸ் முறையை கடைபிடித்து வருகின்றன. இந்நிலையில் 2021-ல் இந்த பெஞ்ச் சைஸ் பணியாளர்களின் தேவை 45-60 நாட்களாக இருந்துள்ளது. ஆனால் தற்போது இவர்களுக்கான தேவை 35-45 நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது.
இதனடிப்படையில் கணிசமான அளவு பணியாளர்கள் குறைப்பு செய்யப்பட்டுள்ளனர். இந்த ட்ரெண்ட் ஆனது 2026 வரைக்கும் தொடரும் என தகவல்கள் வெளிவந்துள்ளதால் பணியாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தொழில்நுட்ப மேம்பாடுகளை மென்பொருள் நிறுவனங்கள் அதிகம் பயன்படுத்த தொடங்கியுள்ளன.
குறிப்பாக ஆர்டிபிஷியல் இன்டெலிஜென்ஸ் ஏஐ தொழில்நுட்பம், மெஷின் லேர்னிங், கிளவுட் கம்ப்யூட்டிங் முறைகள் ஆட்குறைப்பை அதிகப்படுத்தியுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. அந்த வகையில் பெரிய நிறுவனங்களில் 15% வரை ஆட்குறைப்பு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
Comments are closed.