ஐ.எஸ்.எல். கால்பந்து: கோவாவை வீழ்த்தியது ஜாம்ஷெட்பூர்!!…

13 அணிகள் இடையிலான 11-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் நேற்றிரவு கோவாவில் நடந்த 6-வது லீக் ஆட்டத்தில் எப்.சி. கோவா அணி, ஜாம்ஷெட்பூர் எப்.சி.யை எதிர்கொண்டது. திரில்லிங்கான இந்த ஆட்டத்தில் கோவா அணியின் அர்மாண்டோ சாடிகு 45-வது நிமிடத்தில் கோல் போட்டார். ஜாம்ஷெட்பூர் அணியில் ஜாவியர் சிவேரியோ 74-வது நிமிடத்தில் பதில் கோல் திருப்பினார். மாற்று வீரராக களம் இறங்கிய ஜாம்ஷெட்பூர் அணியின் ஜோர்டான் முர்ரே கடைசி நிமிடத்தில் (90-வது நிமிடம்) கோல் அடித்து தங்கள் அணிக்கு 2-1 என்ற கணக்கில் வெற்றியை தேடித்தந்தார்.

- Advertisement -

Comments are closed.