திடீரென கனெக்டிவிட்டி இல்லாமல் ஜியோ பயனர்கள் சிக்கித் திணறல் …?
இந்தியாவில் பல்வேறு பகுதிகளில் ரிலையன்ஸ் ஜியோ சேவைகள் முடங்கியுள்ளன. மும்பையில் ஜியோ சேவைகள் இயங்கவில்லை என்று பலரும் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். இதுதொடர்பாக டவுன் டிடெக்டர் வெளியிட்டுள்ள தகவல்களின் படி ஜியோ நெட்வொர்க் கோளாறு காரணமாக சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று மதியம் 12.15 மணி முதல் ஜியோ சேவைகளில் பாதிப்பு ஏற்பட்டது. கிட்டத்தட்ட 65 சதவீதம் பேருக்கு சிக்னல் கிடைக்கவில்லை என்று பிரச்சினையும், 19 சதவீதம் பேருக்கு மொபைல் இண்டர்நெட் பயன்படுத்த முடியாத சூழலும் உருவாகி இருக்கிறது. மேலும் 16 சதவீதம் பேருக்கு ஜியோஃபைபர் நெட்வொர்க் சரியாக இயங்கவில்லை.நெட்வொர்க் கோளாறு தொடர்பாக ஜியோ சார்பில் இதுவரை எந்த தகவலும் அளிக்கப்படவில்லை.
Comments are closed.