இந்தியாவில் 400 சிசி பைக் அறிமுகம் செய்த கவாசகி…!

கவாசகி நிறுவனத்தின் 2025 நின்ஜா ZX 4RR மோட்டார்சைக்கிள் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய நின்ஜா ZX 4RR மாடலின் விலை ரூ. 9 லட்சத்து 42 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என துவங்குகிறது. சமீபத்தில் இந்த பைக் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், தற்போது இந்தியாவிலும் வெளியிடப்பட்டது. அம்சங்களை பொருத்தவரை இந்த பைக்- ஸ்போர்ட், ரோட், ரெயின் மற்றும் கஸ்டம் என மொத்தம் நான்கு ரைட் மோட்களை கொண்டிருக்கிறது. இத்துடன் டிராக்ஷன் கண்ட்ரோல், டூயல் சேனல் ஏபிஎஸ் வழங்கப்பட்டு இருக்கிறது. 2025 கவாசகி நின்ஜா ZX 4RR மாடல் குறைந்த எண்ணிக்கையிலேயே விற்பனைக்கு வருகிறது. இந்த மாடலுக்கான முன்பதிவுகள் ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகின்றன.

- Advertisement -

Comments are closed.