திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரி சார்பில் சட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி…
திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியின் முதுகலை சமூக பணித்துறை மற்றும் திருச்சி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு ஆகியவை சார்பில் ஊரக வளர்ச்சி திட்டத்தில் பணிபுரியும் பணியாளர்களுக்கு சட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி சின்ன கருப்பூர் கிராமத்தில் உள்ள சமுதாய கூடத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஸ்ரீரங்கம் சார்பு நீதிமன்றத்தின் சட்ட வட்டப்பணிகள் குழு வக்கீல் ஆரோக்கியராஜ் கலந்து கொண்டு, பெண்களுக்கான சட்ட உரிமைகள் பற்றி விரிவாக எடுத்துக்கூறினார். இதில் பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து பெரியகருப்பூர் கிராமத்தில் உள்ள சமுதாய கூடத்தில் மகளிர் சுயஉதவி குழுவினருக்கு பெண்களுக்கான சட்ட உரிமைகள் குறித்து சட்ட தன்னார்வலர் ஜி.எம்.எழில் ஏழுமலை எடுத்துக்கூறினார். நிகழ்ச்சியில் நீதி வேண்டிய 2 பெண்களிடம் மனுக்கள் பெற்று ஸ்ரீரங்கம் சார்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பேராசிரியை சரஸ்வதி வழிகாட்டுதலின் படி மாணவிகள் மோகனபிரியா, தேவிகா, லட்சுமிகாந்தன் மற்றும் ஜெப்ரின் ஆகியோர் செய்திருந்தனர்.
Comments are closed.