திருப்பதியில் சிறுத்தை நடமாட்டம்: ஸ்ரீவாரி மெட்டுப்பாதையில் இரவில் பக்தர்களுக்கு தடை
திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க பக்தர்கள் ஸ்ரீவாரி மெட்டு மலை பாதை வழியாக நடந்து சென்று தரிசனம் செய்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு இந்த பாதையில் உள்ள காவல் உதவி மையம் அருகே சிறுத்தை ஒன்று நடமாடியது. இதனை கண்ட தேவஸ்தான பாதுகாப்பு படையினர் உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். வனத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சிறுத்தையை தேடும் பணியில் ஈடுபட்டனர். சிறுத்தை நடமாடிய காட்சிகள் அங்குள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகி இருந்தது. மேலும் இன்று முதல் மாலை 6 மணி முதல் அதிகாலை 6 மணி வரை ஸ்ரீவாரி பாதை மூடப்படுகிறது. இரவு நேரங்களில் இந்த பாதையில் பக்தர்கள் செல்ல முழுமையாக தடை விதிக்கப்பட்டுள்ளது.
Comments are closed.