இன்று ஓடிடியில் வெளியான தமிழ் திரைப்படங்களின் லிஸ்ட்!…
இன்று ஓடிடி தளங்களில் ரிலீஸாகும் தமிழ் திரைப்படங்கள் என்னென்ன என்பதை இந்த பதிவில் பார்ப்போம். அறிமுக இயக்குநர் எஸ்டி. மணிபால் இயக்கத்தில் அருள்தாஸ், ஸ்ரீநாத், இடி. அரசன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் சாலா. கேங்ஸ்டர் கதைக்களத்துடன் எடுக்கப்பட்ட இப்படம் இன்று ஆஹா ஓடிடியில் வெளியாகியுள்ளது. இயக்குநர் சாய் கிருஷ்ணா இயக்கத்தில் 2022ல் வெளியான படம் காஃபி. நடிகர் ராகுல் தேவ், இனியா, முக்தா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவான க்ரைம், திரில்லர் திரைப்படம், இன்று ஆஹா ஓடிடியில் வெளியாகியுள்ளது. இயக்குநர் பி. ராமச்சந்திரன் இயக்கத்தில் நடிகை காயத்ரி ஷங்கர், பாலா சரவணன், தேவ் உள்ளிட்டோர் நடிப்பில் உருவான திரைப்படம் பேச்சி. திரில்லர் படமாக எடுக்கப்பட்ட இப்படம் இன்று ஆஹா ஓடிடியில் வெளியாகியுள்ளது.
Comments are closed.