வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்தது…!தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்பு…!
வங்கக்கடலில் நிலவி வரும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற உள்ளது என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. வங்கக்கடலில் வடக்கு ஆந்திரா, அதை ஒட்டிய தெற்கு ஒடிசா கடற்கரை பகுதிகளில் நேற்று காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 3 நாளில் வடக்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும். வடக்கு ஒடிசா கடற்கரை பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும். தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் இன்று முதல் 7 நாட்கள் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Comments are closed.