மாஹாளய அமாவாசை : திருச்சி காவிரி படித்துறைகளில் முன்னோருக்கு தர்ப்பணம் கொடுக்க குவிந்த மக்கள்..!!

புரட்டாசி மாதத்தில் வரக்கூடிய அமாவாசையே மகாளய அமாவாசை என்று அழைக்கப்படுகிறது. மகாளய அமாவாசை தினமான புரட்டாசி அமாவாசை அன்று பிதுர்பூஜை செய்தால் நம் முன்னோர்களின் ஆசி கிடைப்பதுடன் நல்ல பலன்கள் கிடைக்கும். மகாளய அமாவாசையை முன்னிட்டு ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் காவிரி படித்துறைக்கு திருச்சி மாவட்டம் மட்டுமல்லாது கரூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, அரியலூர், சேலம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து மக்கள் வருகை தந்து, முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து காவிரியில் பிண்டம் கரைத்து வழிபட்டனர்.இதேபோல் அம்மா மண்டபம் ரோட்டில் உள்ள கருட மண்டபம், கீதாபுரம் படித்துறை, திருச்சி அய்யாளம்மன் படித்துறை, ஓடத்துறை படித்துறை, கம்பரசம்பேட்டை, ஜீயபுரம், முக்கொம்பு உள்ளிட்ட காவிரி கரையோரங்களில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் முன்னோர்களின் நினைவாக தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர்.

- Advertisement -

Comments are closed.