பராமரிப்பு பணிகள் : ரெயில்களின் வழித்தடங்களில் மாற்றம்…!
திருச்சி ரெயில்வே கோட்டம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-பராமரிப்பு பணிகள் காரணமாக செங்கோட்டை – மயிலாடுதுறை விரைவு ரெயில் (வண்டி எண்- 16848) அடுத்த மாதம் 8-ந்தேதி வரை கள்ளிக்குடி, திருமங்கலம், திருப்பரங்குன்றம், மதுரை, கொடைக்கானல் சாலை, திண்டுக்கல், வடமதுரை, வையம்பட்டி, மணப்பாறை ரெயில் நிலையங்களை தவிர்த்து விருதுநகர், மானாமதுரை, காரைக்குடி, திருச்சி வழியாக இயக்கப்படும். கூடுதலாக மானாமதுரை, காரைக்குடி ரெயில் நிலையங்களில் நின்று செல்லும். குருவாயூர் – சென்னை எழும்பூர் விரைவு ரெயில் (வண்டி எண்- 16128) இன்று(திங்கட்கிழமை), 26, 27-ந் தேதிகள் மற்றும் அடுத்த மாதம் (அக்டோபர்) 2, 3-ந் தேதிகளில் விருதுநகர், மானாமதுரை, காரைக்குடி வழியாக இயக்கப்படும். நாகர்கோவில் – மும்பை சி.எஸ்.டி. விரைவு ரெயில் (வண்டி எண்- 16352) வருகிற 26-ந் தேதி மற்றும் அடுத்த மாதம் 3-ந் தேதி ஆகிய நாட்களில் விருதுநகர், மானாமதுரை, காரைக்குடி, திருச்சி வழியாக இயக்கப்படும்.
Comments are closed.