மார்ச் 13 குறிச்சாச்சு.. POCO சேல்.. வெறும் ரூ.10,249-க்கு 108 கேமரா.. 5030mAh பேட்டரி.. எந்தெந்த மாடல்கள்?
போக்கோ பிரியர்கள் அடிச்சு புடிச்சு ஆர்டர் போடும்படியான டிஸ்கவுண்ட் போக்கோ மகளிர் தின விற்பனையில் (POCO Women Day Sale) கிடைக்கிறது. மார்ச் 13ஆம் தேதி வரையில் கிடைக்கும் இந்த சலுகை நாட்களில் போக்கோ சி75 5ஜி (POCO C75 5G), போக்கோ எம்6 பிளஸ் 5ஜி (POCO M6 Plus 5G) மற்றும் போக்கோ எம்7 ப்ரோ 5ஜி (POCO M7 Pro 5G) ஆகிய மாடல்களுக்கு டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. இந்த மாடல்களின் விவரங்கள் இதோ.
போக்கோ சி75 5ஜி அம்சங்கள், விலை (POCO C75 5G Specifications Price): இந்த போக்கோவில் ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS), சியோமி ஹைப்பர்ஓஎஸ் (Xiaomi HyperOS), 4என்எம் ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 4எஸ் ஜென் 2 (4nm Octa Core Snapdragon 4s Gen 2) சிப்செட் கிடைக்கிறது. 50எம்பி மெயின் + 2எம்பி செகண்டரி + 5எம்பி செல்பீ ஷூட்டர் வருகிறது.
“வா ராசா.. உனக்கு தான் வெயிட்டிங்.. 50எம்பி கேமரா.. 6000mAh பேட்டரி.. 120W சார்ஜிங்.. எந்த மாடல்?”
5160mAh பேட்டரி, 18W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் எச்டிபிளஸ் (HD+) ரெசொலூஷன் கொண்ட 6.88 இன்ச் எல்சிடி (LCD) டிஸ்பிளே கிடைக்கிறது. இந்த போக்கோ சி75 5ஜி போனின் 4 ஜிபி ரேம் + 128 ஜிபி மாடலின் மார்கெட் விலை ரூ.8,999ஆக இருக்கிறது. இப்போது, மகளிர் தின சலுகையில் ரூ.7,999 பட்ஜெட்டில் கிடைக்கிறது. இதுபோக ரூ.400 கிரெடிட் கார்டு டிஸ்கவுண்ட் கிடைக்கிறது.
போக்கோ எம்6 பிளஸ் 5ஜி அம்சங்கள், விலை (POCO M6 Plus 5G Specifications Price): இந்த போக்கோவில் ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ், ஹைப்பர்ஓஎஸ், 4என்எம் ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 4 ஜென் ஏஇ (4nm Octa Core Snapdragon 4 Gen 2 AE) சிப்செட் கிடைக்கிறது. 108எம்பி மெயின் கேமரா (சாம்சங் ஐசோசெல் எச்எம்6 சென்சார்) + 2எம்பி மேக்ரோ கேமரா + 13எம்பி செல்பீ வருகிறது.
“அடிச்சு புடிச்சு ஆர்டர்.. வெறும் ரூ.9,499 பட்ஜெட்ல 12GB ரேம்.. 50MP கேமரா.. 5160mAh பேட்டரி.. எந்த மாடல்?”
5030mAh பேட்டரி, 33W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) ரெசொலூஷன், கார்னிங் கொரில்லா கிளாஸ் பாதுகாப்பு கொண்ட 6.79 இன்ச் எல்சிடி டிஸ்பிளே கிடைக்கிறது. இந்த போக்கோவின் 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.13,499ஆக இருக்கிறது. இப்போது, ரூ.10,999 பட்ஜெட்டில் வருகிறது. ரூ.750 பேங்க் டிஸ்கவுண்ட் கிடைக்கிறது.
போக்கோ எம்7 ப்ரோ 5ஜி அம்சங்கள், விலை (POCO M7 Pro 5G Specifications Price):
இந்த போனிலும் ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ், சியோமி ஹைப்பர் ஓஎஸ் உள்ளது. 6என்எம் ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 7025 அல்ட்ரா (6nm Octa Core MediaTek Dimensity 7025 Ultra) சிப்செட் கிடைக்கிறது. 50 எம்பி மெயின் கேமரா (சோனி எல்ஒய்டி 600 சென்சார்) கிடைக்கிறது.
“SALE வெளுக்க போகுது.. ரூ.9,999 போதும்.. 12GB ரேம்.. 50MP கேமரா.. 5160mAh பேட்டரி.. 18W சார்ஜிங்.. எந்த மாடல்?”
மேலும், 2 எம்பி டெப்த் கேமரா மற்றும் 20 எம்பி செல்பீ கேமரா வருகிறது. 5110mAh பேட்டரி, 45W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 (Corning Gorilla Glass 5) பாதுகாப்பு கொண்ட 6.67 இன்ச் சூப்பர் அமோலெட் (Super AMOLED) டிஸ்பிளே கிடைக்கிறது. இந்த போக்கோவின் 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மாடலின் விலை ரூ.14,999ஆக இருக்கிறது.
இப்போது, போக்கோ மகளிர் தின விற்பனையை முன்னிட்டு ரூ.13,999 பட்ஜெட்டில் கிடைக்கிறது. இந்த விலையில் ரூ.750 பேங்க் டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. ஆகவே, ரூ.13,249 விலைக்கு வாங்க முடியும். இந்த போக்கோ மகளிர் தின விற்பனை பிளிப்கார்ட் தளத்தில் நடக்கிறது. மார்ச் 13ஆம் தேதி வரையில் இந்த விலைக்கு ஆர்டர் செய்து கொள்ளலாம்.
Comments are closed.