படிகாரக் கல்லின் மருத்துவ குணங்கள்…!
பல நோய்களுக்கு உடனடி நிவாரணம் தரும் படிகாரத்தில் பல மருத்துவ குணங்கள் உள்ளன. தினமும் படிகாரம் கற்களை உடம்பில் தேய்த்து குளித்து வர உடலில் ஏற்படும் கெட்ட வியர்வை துர்நாற்றம் நீங்கிவிடும். கண்களுக்கு கீழே கருவளையம் உள்ளவர்கள் சிறிது படிகாரம் பொடியை நீர் விட்டு நன்றாக குழைத்து கண்களுக்குள் படாமல் தடவி வருவதால் கண்கள் கீழிருக்கும் கருமை நிறம் மாறும். தினமும் இரவு தூங்குவதற்கு முன் படிகாரம் கற்களை எடுத்து குதிகால் வெடிப்பு உள்ள இடத்தில் நன்றாக தேய்த்து மசாஜ் செய்து வர ஒரு சில நாட்களிலேயே கால்களில் உள்ள வெடிப்புகள் மறைந்துவிடும். நகச்சுற்று என்பது பூஞ்சை அல்லது பாக்டீரியாவால் நகம் பாதிக்கப்படுவது. இதற்கு படிகாரத்தை தண்ணீர் சேர்த்து பேஸ்ட் போல் நன்றாக அரைத்துக் கொண்டு அதனை நகச்சுற்று உள்ள நகங்களில் பூச வேண்டும். காயம்பட்ட இடத்தை படிகாரம் கலந்த தண்ணீரில் கழுவினால் ரத்தப்போக்கு நின்றுவிடும். தலையில் பேன், பொடுகு தொல்லை இருந்தால் படிகார நீரில் கழுவினால் முடியில் சேரும் தூசி மற்றும் அழுக்கு வெளியேறி பேன்களை கொல்லும். பொடுகை அகற்றும்.
Comments are closed.