அர்ஜென்டினா அணிக்கு திரும்பினார் மெஸ்சி..!!
2026-ம் ஆண்டு உலகக் கோப்பை கால்பந்து போட்டிக்கான தகுதி சுற்று பல்வேறு இடங்களில் நடந்து வருகிறது. இதில் தென்அமெரிக்க அணிகளுக்கான தகுதி சுற்றில் அர்ஜென்டினா அணி வருகிற 10-ந் தேதி வெனிசுலாவையும், 15-ந் தேதி பொலிவியாவையும் சந்திக்கிறது. கோபா அமெரிக்கா இறுதிப்போட்டியில் கணுக்காலில் அடைந்த காயம் காரணமாக கடந்த 2 ஆட்டங்களை தவறவிட்ட அர்ஜென்டினா கேப்டன் லயோனல் மெஸ்சி அணிக்கு திரும்பி இருக்கிறார். இந்த பிரிவில் அர்ஜென்டினா அணி 18 புள்ளிகள் பெற்று முதலிடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
Comments are closed.