மிலாது நபி: செப்டம்பர் 17 ஆம் தேதி விடுமுறை அறிவித்த தமிழக அரசு
இறை தூதரான முகம்மது நபியின் பிறந்த நாளை உலகெங்கும் உள்ள இஸ்லாமிய மக்கள் மிலாது நபியாக மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் பிறை தெரியாததால், இந்த ஆண்டு மிலாது நபி செப்டம்பர் 17ஆம் தேதி கொண்டாடப்படும் என தமிழ்நாடு அரசின் தலைமை காஜி சலாவுதீன் முகமது அயூப்தெரிவித்தார். இதைத் தொடர்ந்து தான் தமிழக அரசு செப்டம்பர் 16 ஆம் தேதிக்கு பதிலாக செப்டம்பர் 17 ஆம் தேதி மிலாது நபி நாளில் விடுமுறை அறிவித்துள்ளது.
Comments are closed.