எழும்பூர் குழந்தைகள் நல ஆஸ்பத்திரியில் நவீன எந்திரம்..!!
தமிழக அரசு பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டை தவிர்ப்பது குறித்து பல்வேறு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. அதை தடுக்கும் வகையில், தனியார் தொண்டு நிறுவனத்துடன் இணைந்து,சென்னை எழும்பூர் குழந்தைகள் நல ஆஸ்பத்திரியில், எந்திரம் (இன்ஸ்டா பின்- ரிவர்ஸ் வெண்டிங் மெஷின்) ஒன்று புதிதாக வைக்கப்பட்டுள்ளது. இந்த எந்திரத்தில் காலி பிளாஸ்டிக் பாட்டில்களை போடும்போது, அதில் உள்ள ‘சென்சார்’ மூலம் முகக்கவசம் இலவசமாக வழங்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. தற்போது ஆஸ்பத்திரிக்கு வருபவர்களில் 75 சதவீதம் போ் காலி பாட்டில்களை இதில் போடுகின்றனர். விரைவில் அனைவரும் பயன்படுத்த தொடங்குவார்கள் என நம்பப்படுகிறது.
Comments are closed.