மும்பை கிரிக்கெட் அணிக்கு ரூ.1 கோடி பரிசு…

மும்பை அணிக்கு இரானி கோப்பையை வென்றதற்காக ரூ.1 கோடி பரிசுத்தொகை வழங்கப்படும் என மும்பை கிரிக்கெட் சங்கம் அறிவித்துள்ளது. லக்னோவில் நடைபெற்ற இந்த போட்டியில், மும்பை தனது முதல் இன்னிங்சில் 537 ரன்கள் குவித்து, 222 ரன் எடுத்த சர்பராஸ் கான் ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார். ரெஸ்ட் ஆப் இந்தியா 416 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. மும்பை 2வது இன்னிங்சில் 329 ரன்கள் எடுத்ததால், ஆட்டம் டிராவில் முடிந்தது. 27 ஆண்டுகளுக்கு பிறகு மும்பை அணிக்கு இந்த வெற்றி கிடைத்தது.

- Advertisement -

Comments are closed.