திருச்சி  சமயபுரம் மாரியம்மன் கோவிலில் நவராத்திரி விழா நாளை முதல் தொடங்குகிறது…

திருச்சி சமயபுரத்தில் உள்ள அருள்மிகு மாரியம்மன் திருக்கோவிலில் ஒவ்வொரு வருடமும் புரட்டாசி மாதத்தில் வரும் அமாவாசைக்கு அடுத்த நாள் முதல் தொடர்ந்து ஒன்பது நாட்களுக்கு நவராத்திரி பெருவிழாவாக கொண்டாடி வருகின்றனர். இந்த வருடம் நவராத்திரி திருவிழா 3-10-2024 வியாழக்கிமை அன்று துவங்கி 11-10-2024 வெள்ளிக்கிழமை வரை நவராத்திரி உற்சவமாகவும், 12-10-2024 விஜயதசமி மற்றும் சரஸ்வதி பூஜை நாளன்று இரவு 7.30 மணிக்கு அம்பாள் புறப்பாடாகி வன்னிமரம் அடைந்து அம்பு போடும் நிகழ்வும் நடைபெற உள்ளது. இதேபோல் இனாம் சமயபுரத்தில் உள்ள ஆதி மாரியம்மன் கோவிலிலும் நவராத்திரி விழா 3-ந்தேதி தொடங்கி 11-ந்தேதி வரை நடைபெற உள்ளது. விழாவிற்கான ஏற்பாடுகளை சமயபுரம் மாரியம்மன் கோவில் அறங்காவலர் குழுத் தலைவர் , கோவில் இணை ஆணையர் , அறங்காவலர்கள், கோவில் பணியாளர்கள் மற்றும் அர்ச்சகர்கள் உள்ளிட்டோர் செய்து வருகின்றனர்.

 

 

- Advertisement -

Comments are closed.