திருச்சி துறையூரில் கூட்டுறவு கிராம கடன் சங்க வங்கிக்கு புதிய கட்டிடம்…
திருச்சி துறையூர் கூட்டுறவு கிராம கடன் சங்க வங்கிக்கு கூட்டுறவு வளர்ச்சி நிதியின் கீழ் ரூ.26 லட்சத்தில் புதிய கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. கட்டிடத்தை ஸ்டாலின் குமார் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார். விழாவில் நகரச் செயலாளர் மெடிக்கல் முரளி, முசிறி சரக கூட்டுறவு துணைப்பதிவாளர் பானுமதி, கூட்டுறவு சார்பதிவாளர் கள அலுவலர் தமிழ்ச்செல்வன், கூட்டுறவு சார்பதிவாளர்கள் வினோத் குமார், குணசேகரன், மாவட்ட பொறுப்பாளர்கள், கூட்டுறவு சங்க செயலாளர்கள் மற்றும் பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Comments are closed.