புதிய iPad Air M3 அறிமுகம்., விலை குறைந்தது iPad Air M2

iPad Air M2 | நீங்கள் ஏர் எம்2 மாடலை வாங்க வேண்டுமா அல்லது சமீபத்திய 7-வது தலைமுறை ஐபேட் ஏர் வெர்ஷனை வாங்க வேண்டுமா என்பது குறித்து பார்க்கலாம். ஆப்பிள் நிறுவனம் சமீபத்தில் இந்தியாவில் புதிய ஐபேட் ஏர் எம்3 டேப்லெட்டை அறிமுகப்படுத்திய நிலையில், விஜய் சேல்ஸில் ஐபேட் ஏர் எம்2-ன் விலை குறைந்துள்ளது. இந்த ஐபேட் ஏர் மாடல் இப்போது ரூ.54,690-க்கு கிடைக்கிறது. இது அதன் ஒரிஜினல் ரீடெய்ல் விலையான ரூ.59,900-லிருந்து குறைவு ஆகும். தவிர எஸ்பிஐ அல்லது ஐசிஐசிஐ பேங்க் கார்டுகளைப் பயன்படுத்தி, இதனை வாங்கும் யூஸர்கள் ரூ.4,000 கூடுதல் தள்ளுபடியைப் பெற முடியும், இதனால் விலை ரூ.50,600 ஆக குறையும். இந்த சலுகை தற்போது லைவில் உள்ள நிலையில், நீங்கள் ஏர் எம்2 மாடலை வாங்க வேண்டுமா அல்லது சமீபத்திய 7-வது தலைமுறை ஐபேட் ஏர் வெர்ஷனை வாங்க வேண்டுமா என்பது குறித்து பார்க்கலாம். டேப்லெட் அப்கிரேடை கருத்தில் கொள்பவர்களுக்கு iPad Air M2 ஒரு நல்ல தேர்வாகவே உள்ளது. குறிப்பாக, நீங்கள் iPad 9 அல்லது iPad 10 போன்ற பழைய மாடல்களில் இருந்து மாற விரும்பினால், M2 வேரியன்ட்டானது வெப் பிரவுசிங், வீடியோக்களை ஸ்ட்ரீமிங் செய்தல் அல்லது லைட் கேமிங் போன்ற அன்றாட பணிகளுக்கு நம்பகமான செயல்திறனை வழங்குகிறது. நீங்கள் ஏற்கனவே iPad Air M1-ஐ வைத்திருந்தால், iPad Air M3-ஐ தேர்வு செய்வது உண்மையில் சிறந்ததாக இருக்கும். ஏனெனில், இது புதிய ஹார்ட்வேர் மற்றும் மேம்படுத்தப்பட்ட ஸ்பீடை வழங்குகிறது.

- Advertisement -

Comments are closed.