அடுக்குமாடி குடியிருப்புகளில் இருப்போருக்கு புதிய ரூல்ஸ் : தமிழ்நாடு அரசு
அடுக்குமாடி குடியிருப்பு உரிமையாளர்கள் பாதுகாப்பு சட்ட விதிகளை வகுத்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு செய்துள்ளது. அடுக்குமாடி உரிமையாளர் அல்லது பெரும்பாலான அடுக்குமாடி குடியிருப்பு கொண்ட உரிமையாளர்கள் சங்கங்களை உருவாக்கி பதிவு செய்ய வேண்டும்.அதற்கு அவர்கள் புதிய சட்டப்படி விண்ணப்பிக்க வேண்டும். ஒரு சங்கத்தை உருவாக்க குறைந்தபட்சம் நான்கு அடுக்குமாடி உரிமையாளர்கள் இருக்க வேண்டியது அவசியம் ஆகும். பதிவு செய்யப்பட்ட சங்கங்கள் ஒவ்வொன்றும் மேலாளர் குழுவை நியமித்தாக வேண்டும். மேலாளர்கள் குழு சொத்தின் மொத்த அடுக்குமாடி உரிமையாளர்களில் மூன்றில் ஒரு பங்காக இருக்க வேண்டும்.
Comments are closed.