குறைந்த விலையில் வெளியாகும் புதிய டெக்னா பாப் 9 5ஜி போன்…!

டெக்னோ நிறுவனம் தனது டெக்னோ பாப் 9 5ஜி (TECNO POP 9 5G) ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது. அதாவது இந்த புதிய வரும் செப்டம்பர் 24-ம் தேதி அறிமுகம் செய்யப்பட உள்ளது. குறிப்பாக சோனி கேமரா, 5000mAh பேட்டரி உள்ளிட்ட அம்சங்களுடன் மலிவு விலையில் இந்த போன் வெளிவரும். ஹோல் கட்அவுட் மற்றும் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட பிளாட் எல்சிடி டிஸ்பிளே உடன் இந்த புதிய டெக்னோ பாப் 9 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். மேலும் இதன் டிஸ்பிளேவில் 900 நிட்ஸ் ப்ரைட்னஸ், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மீடியாடெக் டைமன்சிட்டி 6300 5ஜி எஸ்ஒசி (MediaTek Dimensity 6300 5G SoC) சிப்செட் உடன் இந்த புதிய டெக்னோ பாப் 9 5ஜி போன் வெளிவரும்.

- Advertisement -

Comments are closed.