நிகிதா போர்வாலுக்கு மிஸ் இந்தியா பட்டம்…

பெமினா மிஸ் இந்தியா 2024 இறுதிப் போட்டி மும்பையில் நடைபெற்றது. மிஸ் இந்தியா அழகி போட்டி தொடங்கி 60வது வருடத்தை நிறைவு செய்துள்ளது. இதனை கொண்டாடும் வகையில் இந்த வருடம் மிஸ் இந்தியா போட்டி பெரிய அளவில் நடத்தப்பட்டு, அழகிகள் தேர்விற்கும் பல்வேறு சுற்றுகள் வைக்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று முன்தினம் மும்பையில் நடந்த இறுதிப்போட்டியில் மத்திய பிரதேச மாநிலம் உஜ்ஜைனியை சேர்ந்த நிகிதா போர்வால் மிஸ் இந்தியா பட்டத்தை வென்றார். மிஸ் இந்தியா பட்டம் வென்றுள்ள நிகிதா, உலக அழகி போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்கவுள்ளார். முன்னதாக உலக அழகி போட்டியில் ஐஸ்வர்யா ராய், ப்ரியங்கா சோப்ரா, மனுஷி சில்லார் ஆகியோர் பட்டம் வென்றுள்ளனர்.

- Advertisement -

Comments are closed.