நிசான் மேக்னைட் ஃபேஸ்லிஃப்ட் இந்தியாவில் அறிமுகம்…!
நிசான் நிறுவனத்தின் மேக்னைட் ஃபேஸ்லிஃப்ட் மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய நிசான் மேக்னைட் ஃபேஸ்லிஃப்ட் மாடல் விலை ரூ. 5 லட்சத்து 99 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த விலை காரை வாங்கும் முதல் 10 ஆயிரம் வாடிக்கையாளர்களுக்கு மட்டும் பொருந்தும். புதிய மேக்னைட் ஃபேஸ்லிஃப்ட் மாடல் ஆறு வேரியண்ட்கள், இருவித எஞ்சின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இந்த கார் 1.0 லிட்டர் NA பெட்ரோல் அல்லது 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் என இருவித எஞ்சின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இவை முறையே 71 ஹெச்பி பவர், 96 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது.
Comments are closed.