சேலம் அருகே தனியார் பேருந்து கவிழ்ந்து தீப்பிடித்து விபத்து..!!
சேலம் சங்ககிரி அருகே கோவை-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் தனியார் ஆம்னி பேருந்து ஒன்று இரு சக்கர வாகனத்தின் மீது மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. பேருந்து கவிழ்ந்தவுடன் தீப்பிடித்து எரியத் தொடங்கிய நிலையில், உள்ளே இருந்த 20-க்கும் மேற்பட்ட பயணிகள் லேசான காயத்துடன் உடனடியாக மீட்கப்பட்டனர். இதனிடையே பேருந்து மோதியதில் இருசக்கர வாகனத்தில் வந்த பெரியசாமி என்பவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். விபத்து குறித்து சங்ககிரி டி.எஸ்.பி., ராஜா தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Comments are closed.