திருச்சி தலைமை தபால் நிலைய வளாகத்தில் கொலு கண்காட்சி…
நவராத்திரியை முன்னிட்டு திருச்சி தலைமை தபால் நிலைய வளாகத்தில் அஞ்சல் அட்டகாசம் 2.0 என்ற தலைப்பில் கொலு கண்காட்சி தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இந்த கொலு கண்காட்சியில் அஞ்சல்துறை கடந்து வந்த பாதைகள், திட்டங்கள் மற்றும் செயல்பாடுகளை விவரிக்கும் விதத்தில் பொம்மைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இந்த கண்காட்சியில் மத்திய அஞ்சல் மண்டலத்துக்குட்பட்ட 11 கோட்டங்களும், ஒரு ஆர்.எம்.எஸ். யூனிட்டும் பங்கு பெற்று அஞ்சல் சேவைகள் பற்றிய பொம்மைகளை காட்சிப்படுத்தினர். இந்த கண்காட்சியை மத்திய மண்டல அஞ்சல்துறை தலைவர் நிர்மலாதேவி முன்னிலையில் தூய்மை பணியாளர்கள் குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தனர். நிகழ்ச்சியில் அஞ்சல்துறை சார்பில் தூய்மைப்பணியாளர்கள் கௌரவிக்கப்பட்டனர். தொடக்க நிகழ்ச்சியில் இந்திராகணேசன் கல்லூரி மாணவர்கள் பங்கேற்று கண்காட்சியை கண்டுகளித்தனர். கண்காட்சியானது வருகிற 12-ந் தேதி வரை காட்சிபடுத்தப்பட உள்ளது.
Comments are closed.